2010-04-12 15:08:04

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை ஜெப உரை


ஏப்ரல்12,2010 திருச்சபையின் மறைப்பணி என்பது இறைவனின் கருணை நிறை அன்பின் மகிழ்வு நிறை உண்மைத்தன்மையை மக்களுக்குக் கொணர்வதாகும் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புனித வாரக் கொண்டாட்டங்களுக்குப் பின் திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தல் கந்தோல்ஃபோவில் ஓய்வெடுத்துவரும் திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று அங்கு கூடியிருந்த விசுவாசிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை ஜெப உரையின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
இயேசு உயிர்த்த பின் சீடர்களுக்குத் தோன்றி புனித தோமையாரின் விசுவாசக் குறைபாட்டை நீக்க உதவிய நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிட்ட பாப்பிறை, காயங்களில் விரலை விடச் சொன்னதன் மூலம் புனிதரின் குறைபாட்டை மட்டுமல்ல நம் குறைபாடுகளையும் இயேசு நிவர்த்திச் செய்துள்ளார் என்றார்.இறைவனின் இரக்கம் நிறை அன்பையும் மகிழ்வையும் தூயஆவியானவர் நமக்குக் கொணர்ந்தார் என்ற திருத்தந்தை, இறைவனின் இரக்கம் நிறை அன்பை மக்கள் அனுபவித்து மகிழ உதவியதன் மூலம் மக்களின் மனங்களை இறைவன் பால் திருப்ப உதவிய புனித ஜான் மேரி வியான்னியை இந்த குருக்கள் ஆண்டில் மேய்ப்பர்கள் பின்பற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.