2010-04-12 15:09:27

கடந்த மாதங்களில் எத்தியோப்பியாவில் வாழும் 52 லட்சம் மக்கள் கடும் உணவு பற்றாக்குறையைச் சந்தித்து வருகின்றனர்


ஏப்ரல்12,2010 கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் எத்தியோப்பியாவில் Sub Saharan Africa பகுதியில் வாழும் 52 லட்சம் மக்கள் கடும் உணவு பற்றாக்குறையைச் சந்தித்து வருகின்றனர் என்றும், அவர்களுக்கு அடிப்படை உதவிகள் செய்யப்பட்டுள்ளதெனவும், எத்தியோப்பியாவிலிருந்து வெளியாகும் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.
இந்தக் கடும் உணவு பற்றாக் குறையைச் சமாளிக்க, பல்வேறு அயல் நாட்டு நிதி உதவியாளர்களிடமிருந்து 9 கோடியே 70 லட்சம் யுரோ மதிப்புடைய உதவிகள் கடந்த மூன்று மாதங்களாய் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதெனவும், இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இப்பகுதி மக்களுக்கு 7 லட்சம் டன் எடையுள்ள உணவு வழங்கப்படும் என்றும் இச்செய்திக் குறிப்புகள் மேலும் கூறுகின்றன.பல ஆண்டுகளாய் வறட்சியையும், உணவு பற்றாக் குறையையும் சந்தித்து வரும் எத்தியோப்பியா, நிஜெர், சாட் (Niger, Chad) நாடுகள், அண்மையில் உலகம் சந்தித்துவரும் புவி மேப்படைதலால் இன்னும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனவென இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.