2010-04-12 15:09:44

அமெரிக்காவில் 47 நாடுகளிலிருந்து வந்துள்ள தலைவர்கள் சந்திக்கும் அணு ஆயுதங்கள் பாதுகாப்பு குறித்த உச்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது


ஏப்ரல்12,2010 அடிப்படைவாதக் குழுக்களின் கைகளில் அணு ஆயுதங்கள் இருப்பது அமேரிக்கா, மற்றும் உலகின் அமைதிக்கு பெரும் ஆபத்து என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பாரக் ஒபாமா தெரிவித்தார்.
இத்திங்கள் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 47 நாடுகளிலிருந்து வந்துள்ள தலைவர்கள் சந்திக்கும் அணு ஆயுதங்கள் பாதுகாப்பு உச்சி மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் பாரக் ஒபாமா இவ்வாறு கூறினார்.
இந்த உச்சி மாநாடு அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. 1945 ஆம் ஆண்டு உலகத் தலைவர்கள் San Francisco நகரில் ஒன்று கூடி, ஐக்கிய நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கிய அந்த நிகழ்வுக்குப் பின், அமெரிக்க ஐக்கிய நாட்டில் இத்தனை உலகத் தலைவர்கள் சேர்ந்து வரும் ஒரு முக்கிய நிகழ்வு இப்போதுதான் நடைபெறுகிறதென அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.அணு ஆயுதங்கள் பாதுகாப்பு குறித்த உச்சி மாநாட்டில், அணு ஆயுதத் தளவாடங்கள் திருடப்படுவதைத் தடுப்பது, அல்லது அடிப்படை வாதக் குழுக்களுக்கு அவை சென்று சேராமல் இருப்பது ஆகிய முயற்சிகள் இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் நடை பெறும் நோக்கோடு முடிவுகள் எடுக்கப்படும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.