2010-04-10 07:36:17

ஏப்ரல் 10. நாளும் ஒரு நல்லெண்ணம்.


ஏழைகள் இயற்கையாய் உருவாவதில்லை.

சுரண்டல் பெருச்சாளிகள் விதையிட,

பொருளாதார கொள்கை தடுமாற்றங்களினால் வேர் விட,

ஏழைகள் மனத்தளர்வெனும் நீரூற்ற

ஏழ்மை வளர்கிறது.

இடைத்தரகர்களையும் பதுக்கல்காரர்களையும் வாழவைக்கும் சட்டங்களும் திட்டங்களும், ஏழைகளை முன்னேற்ற செய்துள்ளது என்ன?.

வேலை என்பது அடிப்படை உரிமையாக்கப்படல்,

அடிப்படை கல்வி, தொழிற்பயிற்சி, கிராம மறுவாழ்வு, கிராமபுற மக்கள் நலன் போன்றவைகளில் முதற் கவனம் வேண்டும்.

பதுக்கல்களையும் லஞ்சங்களையும் ஒழித்தால் எழ்மையை குறைக்க வழிகள் பிறக்கலாம்.

ஆனால் சிந்திக்க வேண்டியவர்களோ சிந்திக்க மறுக்கிறார்கள்,

இலவசங்களே போதுமென்றாகி விட்டார்கள்.

பிறர் உழைப்பைச் சுரண்டும் கலாச்சாரம் கண்டும் காணாமல் விடப்படுகிறது.

தொலைநோக்கு பார்வை இல்லா அரசியல் அவலங்களை என்னச் சொல்வது?








All the contents on this site are copyrighted ©.