2010-04-10 12:48:43

இயேசுவின் உடலை மூடியிருந்ததாகச் சொல்லப்படும் தூரின் நகர் துணி ஹிட்லரிடமிருந்து பாதுகாக்கப்பட்டது


ஏப்ரல்10,2010 இத்தாலியின் தூரின் நகரில் பாதுகாக்கப்பட்டு வரும் இயேசுவின் உடலை மூடியிருந்ததாகச் சொல்லப்படும் துணி, இரண்டாம் உலகப் போரின் போது பாதுகாப்பு கருதி தூரின் நகரிலிருந்து தெற்கு இத்தாலியில் உள்ள ஒரு துறவு மடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
தூரின் நகரம் உலகப் போரின் போது தாக்கப்படலாம் என்பது இந்தத் துணி நீக்கப்பட்டதற்குக் காரணம் என்று அப்போது கூறப்பட்டாலும், இப்போது மேலும் சில விவரங்கள் ஊடகங்களில் வெளி வந்துள்ளன.
ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் இந்தப் புனிதப் பொருளை அபகரித்துச் செல்லலாம் என்ற கணிப்பே இந்தத் துணி நீக்கப்பட்டதன் முக்கிய காரணம் என்று அண்மைச் செய்திகள் கூறுகின்றன.1938ஆம் ஆண்டு இத்தாலிக்கு வருகை தந்த ஹிட்லர், தூரின் நகர புனிதப் பொருள் மீது அளவுக்கதிமாய் ஆர்வம் கொண்டிருந்தார் என்றும், இந்தப் புனித பொருளின் புதுமைகள் செய்யும் ஆற்றலையும் அறிந்திருந்தார் என்றும் கேள்விப்பட்ட Savoy குடும்பத்தினர், 1939 ஆம் ஆண்டு இந்தத் துணியை தூரின் பேராலயத்திலிருந்து அகற்றி, தென் இத்தாலியில் துறவு மடத்தில் பாதுகாத்ததாகவும், மீண்டும் 1946ல் இந்தப் புனித பொருள் தூரின் பேராலயத்திற்குக் கொண்டு வரப்பட்டதெனவும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.