2010-04-10 12:48:25

13 ஆண்டு வழக்கில் தலித்களுக்கு நீதி. கிறிஸ்தவர்களும் தலித் சமூகத்தவரும் மகிழ்ச்சி


ஏப்ரல்10,2010 13 ஆண்டுகளுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட கிராமத்தினர் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் தற்போது 26 உயர்ஜாதியினருக்கு இந்திய நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர் கிறிஸ்தவர்களும் தலித் சமூகத்தவரும்.
காலதாமதமாகக் கிட்டியுள்ளபோதிலும் நியாயமான ஒன்றாக அது கிட்டியுள்ளது என்றார் இந்திய கத்தோலிக்க உயர் அதிகாரி ஜான் தயாள்.
தாழ்த்தப்பட்ட சமூகங்கள் மீதான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு இத்தீர்ப்பு நல்ல தீர்மானமான செய்தியை, எச்சரிக்கையைச் சொல்வதாக உள்ளது என்றார் இந்திய ஆயர் பேரவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருட்தந்தை பாபு ஜோசப்.
1977 டிசம்பர் முதல் தேதி பீகாரில் 10 குழந்தைகள், 27 பெண்கள் உட்பட 58 தாழ்த்தப்பட்ட இன மக்கள் ஒரு நிலத்தகறாரில் உயர்சாதியினரால் கொல்லப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.