2010-04-09 15:17:00

ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியிலிருந்து ஐந்து குருமாணவர்கள் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டதையொட்டி தலத் திருச்சபை பெரிதும் மகிழ்ந்துள்ளது


ஏப்ரல்09,2010 இவ்வியாழனன்று ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியிலிருந்து ஐந்து குருமாணவர்கள் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டதையொட்டி தலத் திருச்சபை பெரிதும் மகிழ்ந்துள்ளது.
ஒரிஸ்ஸா திருச்சபைக்கு இது ஒரு பெருமைக்குரிய தருணம் என்றும், தலத் திருச்சபை இன்னும் சக்திவாய்ந்ததாய் வாழ்ந்து வருகிறது என்றும் இத்திருநிலைப்பாட்டு சடங்குகளை முன்னின்று நடத்திய கட்டக் புபனேஸ்வர் பேராயர் ரபெல் சீனத் கூறினார்.
இவ்வைந்து குருக்களில் மூவர் கந்தமால் பகுதியில் 2007 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட Bamunigam பங்கிலிருந்து வந்தவர்கள் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த வன்முறைகள் கிறிஸ்துவின் பாடுகளில் பங்கேற்க தரப்பட்ட அழைப்பாக இக்குருக்கள் உணர்ந்ததால் அவர்களது குருத்துவ அழைப்பு இன்னும் ஆழப்பட்டதென பேராயர் சீனத் கூறினார்.இன்றைய காலக் கட்டத்தில் அருட்பணியாளராக இருப்பது மிகவும் சவால்கள் நிறைந்த ஒரு வாழ்க்கை என்றும், இந்த குருத்துவ வாழ்வை மேற்கொள்ள கந்தமால் பகுதியில் கிறிஸ்துவின் சாட்சிகளாய் உயிர் துறந்தவர்கள் தனக்குத் தூண்டுதலாய் இருந்தனர் என்றும் Bamunigam பங்கைச் சார்ந்த புதிய குரு Jaharlal Singh கூறினார்.







All the contents on this site are copyrighted ©.