2010-04-09 15:16:33

அணு ஆயுத ஒழிப்பு ஒரு நல்ல செய்தி என்கிறார் திருப்பீடப்பேச்சாளர்


ஏப்ரல்09,2010 ரஷ்ய மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர்களிடையே அண்மையில் கையெழுத்தான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை குரு பெதரிக்கோ லொம்பார்தி.
இவ்வொப்பந்தம் கையெழுத்தாகியுள்ள இதே Prague அரசு மாளிகையில் சில மாதங்களுக்கு முன்னர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அரசியல் தூதுவர்களுக்கு வழங்கிய உரையை நினைவு கூர்ந்த திருப்பீடப் பேச்சாளர், மக்கள் மற்றும் நாடுகளுக்கிடையேயான ஒருமைப்பாட்டுணர்வின்றி அமைதி, நீதி, முன்னேற்றம் அகியவைகளைக் கொணர முடியாது என்ற பாப்பிறையின் வார்த்தைகளை எடுத்துரைத்தார்.
2002ம் ஆண்டு நிலைகளோடு ஒப்பிடும்போது, தற்போது அணு ஆயுதங்களில் 30 விழுக்காடு குறைக்கப்படவுள்ளது நல்ல முன்னேற்ற நடவடிக்கையே என்ற குரு. லொம்பார்தி, தற்போது உலகின் வசம் உள்ள அணு ஆயுத்கங்கள் உலகத்தையே முற்றிலுமாக அழிக்க வல்ல சக்தி உடையவை எனினும் அமைதி, நம்பிக்கை, ஒருமைப்பாடு போன்றவைகளின் துணை கொன்ண்டு அனைத்தையும் வெற்றி கொள்ளமுடியும் எனவும் கூறினார்.ஆணு ஆயுதங்களில் முதலீடு செய்யப்பட உள்ள நிதி, மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு என ஒதுக்கப்படவேண்டும் என திருச்சபை, அரசுகளை வலியுறுத்த விரும்புவதாக கூறிய இயேசு சபை குரு, அமைதியை உருவாக்குபவர்கள் பக்கமே திருச்சபை என்றும் நின்று ஊக்கமளிக்க விரும்புகிறது என மேலும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.