2010-04-08 15:16:31

பிலிப்பின்ஸில் நலப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டதைக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் பிலிப்பின்ஸ் ஆயர்கள்


ஏப்ரல்08,2010 பிலிப்பின்ஸில் 43 நலப்பணியாளர்கள் கம்யூனிசப் போராளிகளின் பயிற்சி பெற்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டதைக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் பிலிப்பின்ஸ் ஆயர்கள்.
சட்டத்திற்குப் புறம்பான இந்தக் கைது, பிலிப்பின்ஸில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதென்று பிலிப்பின்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Nereo Odchimar கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நல வாழ்வுக்கான கருத்தரங்கில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இராணுவ தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது அவர்களது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆயர் Odchimar மேலும் கூறினார்.இந்தத் தடுப்புக் காவலில் உள்ளவர்கள் ஏற்கனவே சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும், இது போன்ற கைது முயற்சிகள் திருச்சபையின் சமூகச் சேவையில் ஈடுபட்டுள்ள இன்னும் பலரைத் தகுந்த காரணங்கள் இன்றி கைது செய்வதற்கு வழி வகுக்கும் என்றும் ஆயர் Nereo Odchimar கூறினார்.







All the contents on this site are copyrighted ©.