2010-04-08 15:16:42

பல்சமய குழு ஒன்றை அமைக்க மலேசிய அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளதை மலேசியாவின் பல சமயத்தினரும் வரவேற்றுள்ளனர்


ஏப்ரல்08,2010 மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில், பல்சமய குழு ஒன்றை அமைக்க மலேசிய அமைச்சரவை இச்செவ்வாயன்று ஒப்பதல் அளித்துள்ளதை மலேசியாவின் பல சமயத்தினரும் வரவேற்றுள்ளனர்.
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் சரி சமமாய் அமர்ந்து உரையாடவும் இரு மதங்களுக்கும் இடையே உள்ள ஒருமைப்பாட்டையும், வேறுபாடுகளையும் ஏற்றுக் கொள்ளவும் இந்த பலசமயக் குழு உதவும் என்று அருட்திரு தாமஸ் பிலிப்ஸ் கூறினார்.அல்லா என்ற வார்த்தையை கடவுளைக் குறிக்கும் வார்த்தையாக கத்தோலிக்க நாளிதழ் ஒன்று பயன்படுத்தலாம் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, கடந்த டிசம்பர் மாதம் பல கிறிஸ்தவ கோவில்கள் தாக்கப்பட்டதும், அது தொடர்பாக முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கிடையே ஒற்றுமை குலைந்ததும் அமைச்சரவையின் இந்த முடிவுக்கு ஒரு காரணம் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.