2010-04-08 15:17:02

உயிர்ப்புத் திருவிழிப்பு சடங்குகளின் போது இத்தாலியிலும் பிரான்சிலும் வயது வந்தோர் அதிகமான எண்ணிக்கையில் திருமுழுக்கு பெற்றனர்


ஏப்ரல்08,2010 இந்த ஆண்டு உயிர்ப்பு திருவிழிப்பு சடங்குகளின் போது இத்தாலியில் 1500க்கும் மேற்பட்ட வயது வந்தோரும், பிரான்சில் 2900க்கும் அதிகமான வயது வந்தோரும் திருமுழுக்கு பெற்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.
திருமுழுக்கு பெறுபவர்களில் பலர் மருத்துவர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் என பல தொழில் துறையைச் சார்ந்தவர்கள் என்று இத்தாலிய ஆயர் பேரவையின் திருமுழுக்கு பெற உள்ளவர்களுக்கான பணிக்குழுமத்தின் இயக்குனர் அருட்தந்தை Walter Ruspi இத்தாலிய செய்தித்தாள் ஒன்றுக்கு அண்மையில் அளித்த பெட்டியில் கூறியுள்ளார்.
திருமுழுக்கு பெற விழைவோருக்கு இந்தப் பணிக் குழு ஓராண்டளவு பயிற்சிகள் கொடுத்த பின்னரே திருமுழுக்குப் பெற அனுமதிக்கிறதென செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.
30 அல்லது 40 வயது நிரம்பிய இவர்களில் பலர் 1960 களில் பிறந்தவர்கள். இவர்களின் பெற்றோர் அன்றைய ஹிப்பி கலாச்சாரத்தால் மதங்களற்ற ஒரு சூழலில் இவர்களை வளர்த்தனர் என்றும், வயது வந்த பிறகு இவர்கள் முழு சுதந்திரத்துடன் கத்தோலிக்க மறையை ஏற்க முன் வந்துள்ளனர் என்றும் அருட்தந்தை Ruspi கூறினார்.மதங்களை விட்டு பலர் விலகிச் செல்லும் போக்கு அதிகரித்து வரும் இன்றைய சூழலில், வயது வந்த ஒருவர் திருமுழுக்கை விரும்பி கேட்பது ஆச்சரியத்தையும், மன நிறைவையும் தருகிறதென அருட்தந்தை Ruspi கூறினார்.







All the contents on this site are copyrighted ©.