2010-04-08 15:17:14

அமெரிக்காவில் Baltimore மறைமாவட்டத்தில் உயிர்ப்புத் திருவிழிப்பின் போது வயது வந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உறுதி பூசுதல் பெற்றனர்


ஏப்ரல்08,2010 அமெரிக்காவில் Baltimore மறைமாவட்டத்தில் உயிர்ப்பு திருவிழிப்பின் போது 1090 வயது வந்தவர்கள் உறுதி பூசுதல் பெற்றனர் என்றும், இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மிக அதிக அளவு என்றும் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
அண்மையில் திருச்சபை சந்தித்துவரும் பிரச்சனைகளைத் தாண்டி பல வயது வந்தோர் இன்னும் திருச்சபை மீது நம்பிக்கை கொண்டிருப்பது வரவேற்கத் தக்கது என்று Baltimore உயர் மறைமாவட்ட பேராயர் Edwin O’Brien கூறினார்.
தான் திருவழிபாடுகளில் கலந்து கொள்ளும் பங்கைச் சார்ந்தவர்கள் சூழ இருக்கும் சமுதாயத்திற்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருவதே தான் உறுதி பூசுதல் பெற தூண்டுகோலாய் இருந்ததெனவும், திருச்சபையில் பிரச்சனைகள் இருந்தாலும், அது தொடர்ந்து சீரிய வழியில் முன்னேறும் என தான் நம்புவதாகவும் இந்தத் திருவிழிப்பில் உறுதி பூசுதல் பெற்ற 59 வயது நிறைந்த Rich Foster கூறினார்.







All the contents on this site are copyrighted ©.