2010-04-07 15:42:07

கத்தோலிக்க ஆயர்களும், கத்தோலிக்கத் தலைவர்களும் திருத்தந்தையுடனானத் தங்களது முழு ஒருமைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்


ஏப்ரல்07,2010 தவறான பாலின உறவுகளால் எழுந்துள்ள பிரச்சனைகளில், ஒரு சில ஊடகங்களின் செய்திகள் திருத்தந்தையைத் தவறான வகையில் சித்தரித்துள்ள இந்தச் சூழலில், உலகெங்கும் உள்ள கத்தோலிக்க ஆயர்களும், பிற கத்தோலிக்கத் தலைவர்களும் திருத்தந்தையுடனானத் தங்களது முழு ஒருமைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியின் La Stampa என்ற செய்தித்தாளுக்குப் பேட்டி அளித்த கர்தினால் Roger Etchegaray பல நூற்றாண்டுகளாக பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ள திருச்சபை, இந்த சவாலையும் நம்பிக்கையுடன் சந்தித்து, கிறிஸ்துவை எடுத்துரைப்பதில் சிறிதும் தளராதெனக் கூறினார்.
திருச்சபை சந்தித்து வரும் இந்தப் பிரச்சனையில், திருத்தந்தை கண்டிப்பாகவும், கண்ணியமாகவும் செயல்பட்டுள்ளார் என்று Santo Domingo உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் Nicolas de Jesus Lopez Rodriguez செய்தியாளர்களிடம் கூறினார்.மேலும், பல்வேறு மறைமாவட்டங்களில் புனித வாரத் திருச் சடங்குகளின் போது மறையுரையாற்றிய ஆயர்கள், இந்தப் பிரச்சனையில் திருச்சபையும், திருத்தந்தையும் காட்டும் உறுதியையும், துணிவையும் எடுத்துக் கூறினர் என்று வத்திக்கானின் செய்தித்தாளான L'Osservatore Romano சுட்டிக் காட்டியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.