2010-04-07 15:43:08

ஓட்டளிக்கும் போது, விசுவாசத்தின் குரலுக்கும், மனசாட்சியின் குரலுக்கும் செவிசாய்க்குமாறு இங்கிலாந்தின் கிறிஸ்தவ தலைவர்கள் அறிக்கை


ஏப்ரல்07,2010 தேர்தலில் ஓட்டளிக்கும் போது, விசுவாசத்தின் குரலுக்கும், மனசாட்சியின் குரலுக்கும் செவிசாய்க்குமாறு இங்கிலாந்தின் கிறிஸ்தவ தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வருகிற மே மாதம் 6 தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள பாராளு மன்றத் தேர்தல் ஏப்ரல் 6 இச்செவ்வாயன்று அறிவிக்கப்பட்டதை அடுத்து Scotland கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் கர்தினால் Keith O’Brien உட்பட 30க்கும் மேற்பட்ட கத்தோலிக்க மறறும் கிறிஸ்தவ தலைவர்கள் "மனசாட்சியின் பிரகடனம்" (Declaration of Conscience) என்ற தங்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
திருமண உறவுகளை வலுப்படுத்துதல், அவரவர் விசுவாசத்திற்கேற்ற வாழ்க்கை வாழ நிலவும் சுதந்திரமானச் சூழல், தற்கொலை அல்லது கருணைக் கொலை ஆகியவைகளை எதிர்க்கும் கொள்கைகள் என்ற அடிப்படையில் மனசாட்சியின், விசுவாசத்தின் குரல்களுக்கு செவி மடுக்கும் கட்சிகளையே ஆதரிக்குமாறு இந்தத் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.பிறந்துள்ள, இன்னும் பிறக்காது கருவில் உள்ள குழந்தைகள், நோயுற்றோர், மாற்றுத் திறனுடையோர், வயதானோர் என்று சமுதாயத்தில் பலமற்ற பல்வேறு குழுக்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல் வாதிகளையே தேர்ந்தெடுக்குமாறு இத்தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.