2010-04-07 15:42:40

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் மீண்டும் தங்கள் கல்விப் பணிகளைத் தொடர சலேசிய சபையினர் திட்டம்


ஏப்ரல்07,2010 இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் மீண்டும் தங்கள் கல்விப் பணிகளைத் தொடர திட்டமிட்டுள்ளதாக சலேசிய சபையினர் தெரிவித்துள்ளனர்.
Dimapur பகுதியின் சலேசிய சபைத் தலைவர் அருட்தந்தை James Poonthuruthil இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, இச்சனிக் கிழமை சலேசிய சபையினர் அந்தப் பகுதியை மீண்டும் பார்வையிட உள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் அருணாச்சல் பிரதேசப் பகுதியில் பாலின் (Palin) என்ற கிராமத்தில் இயங்கி வந்த Don Bosco பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 மாணவர்கள் இறந்ததை அடுத்து, அந்தப் பகுதி மக்கள் பதட்டம் அடைந்து, குருக்களையும், அருட்சகோதரிகளையும் தாக்க முற்பட்டதால், அவர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டியிருந்ததென செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.அந்தப் பகுதியில் உள்ள பெற்றோரும், மற்றவர்களும் அப்பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டுமென சலேசிய சபையினரை மீண்டும் கேட்டுக் கொண்டதால், வருகிற மே மாதம் முதல் அப்பணியைத் தொடர தாங்கள் முடிவெடுத்துள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை Jose Karippal கூறினார்.







All the contents on this site are copyrighted ©.