2010-04-07 15:43:18

அணு ஆயுதமற்ற உலகம் உருவாக வேண்டும் - ஐ.நா.வின் தலைமைச் செயலர் Ban Ki-moon


ஏப்ரல்07,2010 அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அணு ஆயுத குறைப்பு பற்றி அண்மையில் எடுத்த முடிவை தான் வரவேற்பதாகவும், இதனால் அணு ஆயுதமற்ற உலகம் உருவாகும் சாத்தியக் கூறுகள் அதிகரித்திருப்பதாகவும் ஐ.நா.வின் தலைமைச் செயலர் Ban Ki-moon கூறினார்.
Kazakhstan நாட்டில் Semipalatinsk என்ற இடத்தில் 450 க்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகள் நிகழ்த்தப்பட்ட Ground Zero பகுதிக்கு இச்செவ்வாயன்று சென்ற ஐ.நா.வின் தலைமைச் செயலர் இவ்வாறு கூறினார்.
இந்த Ground Zero பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல அணு ஆயுத சோதனைகளால், இந்தப் பகுதியின் நிலம், நிலத்தடி நீர், ஆறுகள், குளங்கள் எல்லாமே நச்சுத்தன்மை பெற்றன என்றும், இதன் விளைவாக அங்கு பிறந்த குழந்தைகள் பிறப்பிலேயே உடல் குறைகளுடன் பிறந்ததாகவும், அல்லது புற்று நோயால் பாதிக்கப்பட்டதாகவும் Ban Ki-moon கூறினார்.
1991ல் Kazakhstan அரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற Nursultan Nazarbayev இந்த அணு சோதனைகளை முற்றிலும் தடை செய்ததை நினைவுகூர்ந்து, அவரை ஐ.நா.வின் தலைமைச் செயலர் பெரிதும் பாராட்டினார்.அடுத்த வாரம் வாஷிங்கடனில் நடைபெற உள்ள அணு ஆயுத பாதுகாப்பு உச்சி மாநாட்டில், அனைத்து நாட்டுத் தலைவர்களும் அணு ஆயுதக் களைவில் இன்னும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமெனும் சிறப்பு வேண்டுகோளை விடுக்க இருப்பதாக ஐ.நா.வின் தலைமைச் செயலர் Ban Ki-moon தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.