2010-04-06 16:26:28

இலங்கையில் ஜனநாயக சுதந்திரங்கள் மீறப்படுவது அதிகரித்து வருகிறது - ஆங்கிலிக்கன் ஆயர் Duleep de Chikara


ஏப்ரல்06,2010 இலங்கையில் ஜனநாயக சுதந்திரங்கள் மீறப்படுவது அதிகரித்து வருவதாகவும், சட்டத்தின் ஆட்சி என்பது மிகக் கொடூரமான முறையில் அமுல்படுத்தப் பட்டுள்ளதாகவும் குறை கூறியுள்ளார் அந்நாட்டு ஆங்கிலிக்கன் ஆயர் Duleep de Chikara.
இலங்கையில் Sirasa என்ற சமூகத் தொடர்பு மையம் தாக்கப்பட்டுள்ளது, மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பெண் ஒருவர் புத்த மதத்தை அவமதித்துள்ளார் என கைது செய்யப்பட்டுள்ளது போன்றவைகளையும் சுட்டிக் காட்டி தன் கண்டனத்தை வெளியிட்டார் கொழும்பு ஆங்கிலிக்கன ஆயர்.
எதிர்கட்சிகளின் குரலாக நோக்கப்படும் Sirasa Media மையம் தாக்கப்பட்ட போது, அதனைத் தடுக்க காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார் ஆயர் Chikara. இலங்கையில் இப்போது பலதரப்பட்ட கருத்துக்கள் குறித்து சகிப்புத் தன்மையின்றி செயல்படுவதைக் காண முடிகிறது எனவும் கவலையை வெளியிட்டார் ஆயர்.







All the contents on this site are copyrighted ©.