2010-04-05 15:35:54

'வானதூதர்களின் திங்கள்' குறித்து திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலியுரை


ஏப்ரல்05,2010 புனித வார திருவழிபாட்டுச் சடங்குகளை நிறைவேற்றியபின் சில நாட்கள் Castel Gondolfo கோடை விடுமுறை இல்லத்தில் ஓய்வெடுக்கச் சென்றிருக்கும் திருத்தந்தை, இத்திங்கள் திருச்சபையில் சிறப்பிக்கப்பட்ட 'வானதூதர்களின் திங்கள்' குறித்து அல்லேலூயா வாழ்த்தொலியுரை வழங்கினார்.
இயேசுவின் உயிர்ப்பில் வானதூதர் கல்லைப் புரட்டி அதன் மீது அமர்ந்தது, கல்லறை காலியாயிருப்பதைக் கண்ட பெண்களிடம் இயேசு உயிர்த்து விட்டார் என வானதூதர் அறிவித்தது, இரு வானதூதர்கள் பெண்களிடம் கூறியது, மரிய மதலேனாவிடம் வெள்ளையுடை அணிந்த இரு வானதூதர்கள் "ஏன் அழுகிறாய்?" எனக் கேட்டது என நான்கு நற்செய்தியாளர்களும் வானதூதர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளனர் எனச் சுட்டிக் காட்டினார் பாப்பிறை.இறைவனின் செய்தியை எடுத்துரைப்பவர்களான வானதூதர்கள் போல், நாமும், இறைவனின் கட்டளையான நற்செய்தி அறிவிப்பை, அவரது உயிர்ப்பின் நற்செய்தியை, நம் திருமுழுக்கு மற்றும் உறுதி பூசுதல் எனும் அருள் அடையாளங்கள் வழிப் பெற்றிருக்கிறோம் எனவும் தன் நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை, இதனைச் சிறப்பான விதத்தில் குருக்கள் குருத்துவத் திருநிலைப்பாட்டின் போது பெறுகிறார்கள் என்பதை குருக்களுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் எனவும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.