2010-04-05 15:20:33

ஏப்ரல் 06 நாளும் ஒரு நல்லெண்ணம்


RealAudioMP3
இரண்டாம் உலகப்போர் என்றாலே அன்றைய ஜெர்மன் அதிபர் ஹிட்லரை நினைக்காமல் இருக்க முடியாது. அந்தப் போரின் போது அணுகுண்டுகளை உருவாக்கின நாடுகள், போருக்குப் பின் அவற்றை எவ்வாறு அழிப்பது என்று கவலைப்பட்டன. அப்போது ஜெர்மனி, அணுகுண்டுகளில் நுண்கிருமிகளை செலுத்தி அவற்றைத் தனியாக வைத்து விட்டால் காலப்போக்கில் அவை அந்த அணுகுண்டுகளின் சக்தியைக் குறைத்துச் செயலிழக்கச் செய்துவிடும் என்று கண்டுபிடித்தன. ஆனால் பிறநாடுகள் இதைப் பின்பற்றியிருந்தால் இன்று உலகில் அணுகுண்டு பயம் இருக்காதுதானே. ஆம். மற்றவருக்குத் துன்பம் தரும் ஒன்றை உருவாக்குவது அன்பிற்கு எதிரானது. கபீர்தாசர் சொன்னார்- நான் எத்தனையோ மருந்துகளை சோதித்திருக்கிறேன். அவற்றில் அன்புக்குச் சமமானது இல்லை என்று.







All the contents on this site are copyrighted ©.