2010-03-31 16:17:49

ஹெய்ட்டியை மீண்டும் கட்டி எழுப்பும் பணியில் அந்நாட்டினர் பங்கெடுப்பதற்கு அனுமதிக்கப்படுமாறு காரித்தாஸ் வலியுறுத்தல்


மார்ச் 31,2010 நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி நாட்டை மீண்டும் கட்டி எழுப்பும் பணியில் அந்நாட்டினர் பங்கெடுப்பதற்கு அனுமதிக்கப்படுமாறு சர்வதேச காரித்தாஸ் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

ஜனவரி 12ம் தேதி ஏற்பட்ட பூகம்பம், ஹெய்ட்டியின் Port-au-Prince நகரை அழித்துள்ள வேளை அந்நகரை மீண்டும் கட்டி எழுப்புவதற்கானத் திட்டங்களில் அந்நாட்டினர் ஈடுபடுத்தப்பட வேண்டுமென்று கேட்டுள்ளது காரித்தாஸ் அமைப்பு.

இப்புதனன்று பல நாடுகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஐ.நாவில் கூடி மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து கலந்து பேசியதையடுத்து காரித்தாஸ் இவ்விண்ணப்பத்தை முன்வைத்தது.

காரித்தாஸ் அமைப்பு ஹெய்ட்டிக்கு ஒரு கோடியே இருபது இலட்சம் டாலர் பெறுமான உதவிகளை வழங்கியுள்ளது. இந்நிதியுதவியானது, 11 இலட்சத்து 60 ஆயிரம் பேருக்குத் தேவையான நலவாழ்வுக்கும், சுமார் 15 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்குத் தேவையான உணவுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.