2010-03-27 15:15:34

மாவோயிஸ்ட் தலைவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது, வன்முறையினால் சமூக நீதியைக் கொண்டு வரமுடியாது என்பதை நிரூபித்துள்ளது-கிழக்கிந்திய திருச்சபை


மார்ச்27,2010 இந்தியாவில் 81 வயதாகும் மாவோயிஸ்ட் தலைவர் Kanu Sanyal தற்கொலை செய்து கொண்டிருப்பது, வன்முறையினால் சமூக நீதியையோ அல்லது தன்னிறைவையோ கொண்டு வரமுடியாது என்பதை நிரூபித்துள்ளது என்று கிழக்கிந்திய திருச்சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

Sanyal ன் தற்கொலையானது, அவர் மனக்கசப்பு மற்றும் ஏமாற்றத்தினால் துன்புற்றுள்ளார் என்பதன் தெளிவான அடையாளமாக இருக்கின்றது என்று கார்மேல் சபைக் குரு Varghese Pudiyaveedu கருத்து தெரிவித்தார்.

மேற்கு வங்காள மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் சிலிகுரிக்கு அருகிலுள்ள அவரது வீட்டில் இம்மாதம் 23ம் தேதி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார் சான்யால். இவர் இந்தியாவின் கம்யூனிச கட்சியை நிறுவிய தலைவர்களில் ஒருவர்.

மாவோயிஸ்ட் இயக்கம் என்றழைக்கப்படும் இது நக்சலிசம் என்ற பெயரில் 1969ல் தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தினர் ஏழைகளுக்காக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என்று சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.