2010-03-27 15:16:43

மார்ச் 27 உலக பூமி தினம்


மார்ச்27,2010 இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்படும் உலக பூமி தினத்தை முன்னிட்டு ஆறாயிரத்துக்கு மேற்பட்ட நகரங்களில் நூறு கோடிக்கு அதிகமான மக்கள் ஒரு மணி நேரத்திற்கு மின் விளக்குகளை அணைப்பதற்கு முன்வந்தார்கள் என்று ஐ.நா.செய்தி ஒன்று கூறுகிறது.

அந்தந்தப் பகுதிகளில் இரவு 8.30 மணிமுதல் 9.30 மணிவரை மின் விளக்குகளை அணைப்பதன் மூலம் வெப்பநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான ஐ.நா.வின் முயற்சிகளுக்கு உதவ முடியும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.

இந்த நடவடிக்கையானது WWF என்ற உலக வனவாழ்வு நிதியகத்தின் முயற்சியால் ஆண்டுதோறும் மார்ச் 27ம் தேதி இடம் பெற்று வருகிறது.

கடந்த ஆண்டு நான்காயிரத்துக்கு அதிகமான நகரங்களில் இத்தினம் கடைபிடிக்கப்பட்டது







All the contents on this site are copyrighted ©.