2010-03-27 15:12:32

மங்கோலியாவின் குழந்தைப்பருவத் திருச்சபை நன்றாக வளர்ந்து வருவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது - Ulan Bator ஆயர்


மார்ச்27,2010 மங்கோலியாவின் குழந்தைப்பருவத் திருச்சபை நன்றாக வளர்ந்து வருவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று அந்நாட்டுத் தலைநகர் Ulan Bator ஆயர் Wenceslao Padilla கூறினார்.

மங்கோலியத் திருச்சபை எதிர்கொள்ளும் சவால்களின் மத்தியில், அகிலஉலக கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதரவுடன் அத்தலத்திருச்சபை தொடர்ந்து வளரும் என்ற நம்பிக்கையையும் ஆயர் தெரிவித்தார்.

முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த மங்கோலியக் குடியரசில் 1992ல் முதல் பங்கு உருவானது. தற்சமயம் அந்நாட்டில் 650 மங்கோலிய கத்தோலிக்கர் உள்ளனர். மேலும், 24 நாடுகளைச் சேர்ந்த 87 மறைப்பணியாளர்களும் இருக்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.