2010-03-27 15:13:31

பேராயர் ஆஸ்கார் ரொமெரோ கொலை செய்யப்பட்டது குறித்து மன்னிப்புக் கேட்டுள்ளார் சான் சால்வதோர் அரசுத் தலைவர்


மார்ச்27,2010 எல் சால்வதோர் நாட்டின் சான் சால்வதோரில் பேராயர் ஆஸ்கார் ரொமெரோ (Oscar Romero) கொலை செய்யப்பட்டது குறித்து மன்னிப்புக் கேட்டுள்ளார் அந்நாட்டு அரசுத் தலைவர் Mauricio Funes.

1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி திருப்பலி மறையுரையில் அந்நாட்டில் அநியாயமாய்க் கொல்லப்படும் அப்பாவி மக்களுக்காகக் குரல் கொடுத்தவுடன் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மரணப்படைகள் பேராயர் ரொமெரோவைச் சுட்டுக் கொன்றன.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்நிகழ்வு குறித்து நாட்டின் அரசுத்தலைவர் என்ற முறையில் மன்னிப்புக் கேட்பதாகக் கூறியுள்ளார் ஃபூனெஸ்.

மரணப்படைகளால் சட்டத்துக்குப் புறம்பே நடத்தப்பட்ட வன்முறையில் பேராயர் இறந்துள்ளார் என்றும் இது தொடர்பான குற்றவாளிகள் குறித்த சர்வதேச விசாரணைக்கு அரசு ஒத்துழைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.