2010-03-27 15:18:06

உலகின் தெற்கு பகுதி நாடுகளில் ஏறத்தாழ எண்பது விழுக்காட்டினர் சேரிகளில் வாழ்கின்றனர் - ACP


மார்ச்27,2010 உலகின் தெற்கு பகுதி நாடுகளில் ஏறத்தாழ எண்பது விழுக்காட்டினர் சேரிகளில் வாழ்கின்றனர் என்று ACP என்ற ஆப்ரிக்கா, கரீபியன் மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான முன்னாள் பொதுச் செயலர் Sir John Kaputin கூறினார்.

பிரேசிலின், ரியோ தெ ஜெனியிரோவில் (Rio de Janeiro) இச்சனிக்கிழமை நிறைவடைந்துள்ள உலக நகர்ப்புற கருத்தரங்கையொட்டி இந்தப் புள்ளி விபரங்களை வெளியிட்டார்.

ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் சேரிகளின் நிலைமை கற்பனைக்கு எட்டாததாக இருக்கின்றது என்றுரைத்த காப்புட்டின், ஊழல் அரசியல்வாதிகள் நகரங்களின் நிலப்பகுதிகளை ஆக்ரமித்திருக்கும் வரையில் சேர்களின் நிலைமை மாறாது என்றும் கவலை தெரிவித்தார்.

நகர்ப்புறங்கள் வேகமாக வளர்ந்து வருவது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சேரி மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு அறுபது இலட்சம் பேர் வீதம் அதிகரிக்கும் என்றும் Rio de Janeiro மாநாட்டில் எச்சரிக்கப்பட்டது.

2020ம் ஆண்டுக்குள் இவ்வெண்ணிக்கை 88 கோடியே 90 இலட்சமாக உயரக்கூடும் என்றும் அக்கூட்டத்தில் கூறப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.