2010-03-26 16:45:21

வடஇலங்கை கிராமம் ஒன்றில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பலி நிறைவேற்றப்பட இராணுவம் அனுமதி


மார்ச்26,2010 இலங்கையில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் பாழடைந்துள்ள கத்தோலிக்க ஆலயம் ஒன்றில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது மக்கள் மனதில் ஒரு நிறைவைத் தந்துள்ளது என்று அருட்பணியாளர் ஒருவர் கூறினார்.

இலங்கையின் Valikamam பகுதியில் Myliddy கிராமத்தில் கடந்த இருபது ஆண்டுகளாய் பராமரிப்பின்றி விடப்பட்ட கோவில் ஒன்றில் அண்மையில் பலி நிறைவேற்றிய அருட்பணியாளர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் இவ்வாறு கூறினார்.

Valikamam பகுதி பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்ததை நீக்கச் சொல்லி, யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் இவ்வாண்டு பிப்ரவரியில் அரசுக்கு விடுத்த கோரிக்கையின் பலனாக மார்ச் 20 முதல் இந்தப் பகுதிகளை மக்கள் பயன்படுத்தலாம் என்று அரசு அறிவித்திருந்ததை அடுத்து இந்தக் கோவிலில் திருப்பலி நிறைவேற்றப்பட்டதென அருட்பணியாளர் ஞானப்பிரகாசம் கூறினார்.

அரசு விடுத்த இந்த உத்தரவை அடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஓர் இந்துக் கோவிலுக்கும் மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் மட்டும் 100 கோவில்களுக்கு மேல் இலங்கையின் உள்நாட்டு போரினால் சிதைந்துள்ளதென அருட்பணியாளர் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.