2010-03-26 16:44:35

ஒரிசாவில் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டவர்களை மறைசாட்சிகள் என்று அறிவிப்பதற்கான முயற்சியில் தலத்திருச்சபை இறங்கியுள்ளது


மார்ச்26,2010 இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம் பெற்ற வன்முறையில் தங்கள் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டவர்களை மறைசாட்சிகள் என்று அறிவிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது அம்மாநில தலத்திருச்சபை.

இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய கட்டாக்-புவனேஸ்வர் பேராயர் இரபேல் சீனத் (Raphael Cheenath), விசுவாசத்திற்காகத் தங்களின் உயிரை இழந்தவர்களை மறைசாட்சிகள் என்று அறிவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

இது குறித்தப் போதுமான மற்றும் சந்தேகத்துக்கு இடமில்லா விபரங்களைச் சேகரிக்க வேண்டியுள்ளது என்றுரைத்த பேராயர், இந்நடவடிக்கையின் முதல் கட்டமாக, தகவல்களைச் சேகரிப்பதற்கென உயர்மறைமாவட்டம் ஐந்து பேர் கொண்ட குழுவை உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

ஒரிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டின் ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கிய கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையில் சுமார் 90 பேர் கொல்லப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.