2010-03-26 16:47:04

உலகின் ஆயிரம் பெரிய நகரங்களில் ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதி சீனாவில் இருக்கின்றன


மார்ச்26,2010 உலகின் ஆயிரம் பெரிய நகரங்களில் ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதி சீனாவில் இருக்கின்றன எனவும் இந்நகரங்களின் மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வருகின்றதெனவும் ஐ.நா.வின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

1980ம் ஆண்டில் சீனாவில் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களைக் கொண்ட 51 நகரங்களே இருந்தன, ஆனால் அது தற்சமயம் நான்கு மடங்காகியுள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

2025ம் ஆண்டிற்குள் இந்நகரங்களின் எண்ணிக்கை 236 ஆக உயரக்கூடும் என்றும் ஐ.நா.தெரிவிக்கிறது.

2009ம் ஆண்டின் உலக நகர்ப்புற புள்ளிவிபரங்களின்படி உலகின் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது 350 கோடிப் பேர் நகரங்களில் வாழ்கின்றனர். மேலும், அடுத்த 30 ஆண்டுகளில் கிராம மக்களின் எண்ணிக்கை 340 கோடியிலிருநந்து 290 கோடியாகக் குறையும்.








All the contents on this site are copyrighted ©.