2010-03-26 16:43:49

அறநெறி வாழ்வு அழிக்கப்படுவதற்கெதிராய் ஒவ்வொருவரும் போராட வேண்டும் - ஆயர் கிராசியாஸ்


மார்ச்26,2010 அறநெறி வாழ்வு அழிக்கப்படுவதற்கெதிராய் ஒவ்வொருவரும் போராட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில், மனித சுற்றுச்சூழல் என்ற தலைப்பில் இந்தியா முழுவதும் வாழ்வுக்கான தினம் கடைபிடிக்கப்பட்டது.

இவ்வாழ்வு தினம் குறித்து குறிப்பிட்ட, இந்திய ஆயர் பேரவையின் குடும்பநல ஆணையத் தலைவர் ஆயர் அக்னெல்லோ கிராசியாஸ் (Agnelo Gracias), ஒவ்வொருவருக்கும் தனது ஆன்மாவைச் சுத்தப்படுத்தும் அகச்சுத்திகரிப்பு தேவைப்படுகின்றது என்றுரைத்தார்.

இந்தப்புவி வெப்பமடைந்து வருவது, பனிப்பாறைகள் உருகி வருவது, உயிரினங்கள் அழிந்து வருவது போன்ற வளர்ச்சியைப் பாதிக்கும் விவகாரங்கள் பற்றி நாம் விழிப்பாய் இருந்தாலும், ஒவ்வொருவரிலும் வளர்ந்து வரும் நன்னெறிச் சீர்கேடுகள் குறித்து விழிப்பாய் இருப்பது இன்றியமையாதது என்று கூறினார் ஆயர் கிராசியாஸ்.

எனவே ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் ஒழுக்கச் சீரழிவைக் களைய வேண்டியது இன்றியமையாதது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாழ்வுக்கான தினத்தை முன்னிட்டு, கருவில் வளரும் குழந்தைக்கென அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச் சின்னம் ஒன்றையும் திறந்து வைத்தார் ஆயர் கிராசியாஸ்.








All the contents on this site are copyrighted ©.