2010-03-25 15:09:19

மார்ச் 26 தவக்காலச் சிந்தனை


RealAudioMP3 துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், விரக்திகள், மனச்சுமைகள், மனஅழுத்தங்கள், எதிர்மறை உணர்வுகள், அவமானங்கள், அழிவுச்சிந்தனைகள், கோபதாபங்கள், காமச் சிந்தனைகள், தோல்வி உணர்வுகள், வெறுப்பு, அகங்காரம், ஆணவம், நோய்கள், பயங்கள், தாழ்வுமனப்பான்மை, தன்னல உணர்வுகள், பழிதீர்க்கும் எண்ணங்கள் என நமக்குள்ளும் நமக்கு வெளியிலும் சாத்தானின் ஆதிக்க சக்தி நம்மை அலைக்கழிக்கையில் நாம் எரேமியாவை நினைத்துப் பார்ப்பது நமக்கு மிகுந்த நலம் பயக்கும். துன்பம் அவரைச் சூழ்ந்து ஆக்ரமித்த போதும்கூட அவர் ஆண்டவருடைய வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறார். நம்பிக்கை வைப்பதோடு நின்றுவிடாமல் அவரை நினைந்து நெக்குருகி புகழ்ந்து பாடுவதை இன்றைய முதல் வாசகத்திலிருந்து அறிய முடிகிறது. இயேசுவும் தனது வாழ்வில் துன்ப துயரங்கள் சூழ்ந்த போதும் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் இறைத்திட்டத்தை தனது நற்செயல்கள் வழியாக செய்து காட்டியதால் “யோவான் இவரைப் பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று” என மக்கள் நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு வாழ்ந்ததை இன்றைய நற்செய்தி நினைவு கூறுகிறது.

ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.

ஒவ்வொரு விடியலும் சொல்கிறதே

இரவானால் பகலொன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்

இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்.(வழங்கியவர் அ.பணி.பவுல்ராஜ் சே.ச)







All the contents on this site are copyrighted ©.