2010-03-25 15:10:31

மார்ச்26 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1871 - இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.

1934 – பிரிட்டனில் வாகன ஓட்டுனர்களுக்கான தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.

1942 - இரண்டாம் உலகப் போரின் போது போலந்தில் அவுஷ்விட்ஸ் நாத்சி வதை முகாமில் முதற்தடவையாக பெண்கள் சிறைக் கைதிகளாயினர்.

1953 - ஜொனாஸ் சால்க் (Jonas Salk) தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்.

1971 - கிழக்கு பாகிஸ்தான் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காள தேச விடுதலைப் போர் ஆரம்பமானது.

1975 – உயிரியல் ஆயுத உடன்படிக்கை அமலுக்கு வந்தது.

2006 - முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.








All the contents on this site are copyrighted ©.