2010-03-25 15:17:59

புனித வாரத்தில், இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் ஆளுயர சிலுவைகளைச் சுமந்து 120 மைல்கள் நடப்பதற்கு இளையோர் தீர்மானித்துள்ளனர்


மார்ச்25,2010 இஞ்ஞாயிறன்று ஆரம்பமாகும் புனித வாரத்தில், இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் ஆளுயர சிலுவைகளைச் சுமந்து 120 மைல்கள் நடப்பதற்கு இளையோர் தீர்மானித்துள்ளனர்.
'மாணவர்களின் சிலுவை' என்று அழைக்கப்படும் இந்த முயற்சி 1948 ஆம் ஆண்டு ஆரம்பமான ஒரு பழக்கம். இந்த ஆண்டு இந்த முயற்சி, மார்ச் 27 இச்சனிக்கிழமை அன்று இங்கிலாந்தின் 10 இடங்களில் ஆரம்பமாகி, ஏப்ரல் 2ஆம் தேதி, புனித வெள்ளியன்று Norfolk எனும் இடத்தில் உள்ள Walsingham மரியன்னை ஆலயத்தில் முடிவடையும்.
இது போன்ற திருப்பயணங்கள் பல வழிகளிலும் நிறைவளிக்கும் ஒரு அனுபவம் என்றும், சவால்கள் நிறைந்த இன்றைய காலக் கட்டத்தில் இது போன்ற முயற்சிகள் மிகவும் பயனளிக்கும் அனுபவம் என்றும் "மாணவர்களின் சிலுவை 2010"ன் இயக்குனர் Dave Stanley கூறினார்.இந்த முயற்சியில் ஈடுபடும் பல இளையோர் தங்கள் வாழ்வில் அழைத்தலைக் குறித்து முடிவுகள் எடுக்கவும் இந்தத் திருப்பயணம் உதவியாக இருக்கும் என்றுரைத்த Stanley, இந்த முயற்சிக்கு ‘மாணவர்களின் சிலுவை’ என்று பெயரிடப்பட்டாலும், பல வயதினரையும் உள்ளடக்கும் முயற்சி இது என்று மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.