2010-03-25 15:16:57

தேர்தல்களில் மதத்தை ஒரு அம்சமாகப் பயன்படுத்தப்படுவது கண்டனத்திற்குரியது - கொழும்பு பேராயர் Malcolm Ranjith


மார்ச்25,2010 வரும் தேர்தல்களில் மதத்தை ஒரு அம்சமாகப் பயன்படுத்தப்படுவது கண்டனத்திற்குரியதென கொழும்பு பேராயர் Malcolm Ranjith கூறியுள்ளார்.
அண்மையில் வெளியான தேர்தல் துண்டு பிரசுரம் ஒன்றில் வேட்பாளர் ஒருவர் குருவைப் போல் உடை அணிந்து காட்சி அளித்ததைச் சுட்டிக்காட்டிய பேராயர் Ranjith, இந்த பிரசுரத்தில் உள்ளவர் கத்தோலிக்க குரு இல்லை என்றும், அந்த வேட்பாளர் எந்த வகையிலும் கத்தோலிக்கத் திருச்சபையுடன் தொடர்பு கொண்டவர் இல்லை என்றும் தெளிவாக்கினார்.
மேலும், அரசியலிலும், தேர்தல்களிலும் ஆயர்கள், குருக்கள், துறவியர் ஆகியோர் பங்கெடுப்பதை இலங்கை ஆயர் பேரவை முற்றிலும் தடை செய்துள்ளதெனவும் பேராயர் Ranjith கூறினார்.
முன்னாள் படைத் தளபதி Sarath Fonsekaவிற்கு ஆதரவு தேடி இத்திங்களன்று வெளியான மற்றொரு செய்தித்தாள் விளம்பரத்தில், கிறிஸ்துவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டிய பேராயர் Ranjith, கிறிஸ்துவின், மற்றும் புனிதர்களின் உருவங்களை இதுபோன்ற அரசியல் விடயங்களுக்குப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியதென்றார்.இதற்கிடையே, இலங்கை அரசின் உறுப்பினரான புத்த பிக்கு Uduwe Dhammaloka தான் அரசியலிலிருந்து விலகி, தன் நேரத்தை இனி புத்த மதப் படிப்பினைகளைச் சொல்லித் தருவதில் செலவிடப் போவதாக அண்மையில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.