2010-03-25 15:17:44

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழாவை லெபனான் நாட்டில் ஒரு தேசிய விடுமுறையாக்கும் முயற்சியில் முஸ்லிம் ஒருவர் தீவிரமாக ஈடுபட்டார்


மார்ச்25,2010 மார்ச் 25, இவ்வியாழனன்று கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா லெபனான் நாட்டில் ஒரு தேசிய விடுமுறையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ஒரு தேசிய விடுமுறையாக்கும் முயற்சியில் Sheik Mohammed Nokkari என்ற முஸ்லிம் தீவிரமாக ஈடுபட்டார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Beirutல் சட்டப்படிப்பு மற்றும் இஸ்லாம் கிறிஸ்தவ உறவுகளுக்கான கல்வியை சொல்லித்தருபவரான Nokkari, இவ்வுலகப் பெண்கள், மறு உலகப் பெண்கள் அனைவரிலும் முதன்மையானவர் மரியா என்று கூறியுள்ளார்.
மார்ச் 25ஐ ஒரு தேசிய விடுமுறையாக அறிவிக்க, Nokkari சென்ற ஆண்டு அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். அப்போது, இந்த எண்ணத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தாலும், இவ்வாண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி திருத்தந்தையும், லெபனான் பிரதமர் Saad Haririயும் வத்திக்கானில் சந்தித்துக் கொண்ட போது, மார்ச் 25 தேசிய விடுமுறையாக அறிவிக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டது தனக்கு மிகுந்த மகிழ்வைத் தந்தது என்று Nokkari கூறினார்.Beirutக்கருகில் உள்ள Our Lady of Jamhour கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இணைந்து மார்ச் 25 ஆம் தேதி கொண்டாடும் திருநாளை ஏற்பாடு செய்பவர்களில் Nokkariயும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.