2010-03-23 14:58:16

பிலிப்பின்ஸில் AIDS நோயைத் தடுக்கும் நோக்குடன், கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருவது குறித்து Knights of Columbus அமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது


மார்ச் 23. பிலிப்பின்ஸில் HIV நோய்க் கிருமி பாதிப்புகளைத் தடுக்கும் நோக்குடன், கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருவது குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர் Knights of Columbus என்ற கத்தோலிக்க அமைப்பினர்.

கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த அரசே ஊக்குவிப்பதில் இருக்கும் ஒழுக்க ரீதி பிரச்சனை குறித்த கேள்வியை எழுப்பியுள்ள இவ்வமைப்பு, பல ஆயிரக் கணக்கான தொண்டர்களுடன் பிலிப்பின்ஸின் பத்து மாகாணங்களில் கருத்தடை சாதன எதிர்ப்பு நடைபயணத்தையும் மேற் கொண்டுள்ளது.

AIDS நோய் பரவலுக்கு எதிரான ஆயுதமாக கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது ஒரு பாதுகாப்பான, அல்லது புத்திசாலித்தனமான நடவடிக்கை அல்ல எனக் கூறும் இக்கத்தோலிக்க அமைப்பு, பொறுப்புடன் கூடிய அன்பு நடவடிக்கைகள் குறித்து கற்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் 17 லட்சம் அங்கத்தினர்களைக் கொண்டுள்ள Knights of Columbus அமைப்பிற்கு, பிலிப்பின்ஸில் மட்டும் இரண்டரை லட்சம் அங்கத்தினர்கள் உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.