2010-03-20 15:19:30

இயற்கைப் பேரிடர்களைத் தவிர்ப்பதற்கு அரசுகள் போதுமான வளங்களை மூலதனம் செய்ய பான் கி மூன் பரிந்துரை


மார்ச்20,2010 இயற்கைப் பேரிடர்களைத் தவிர்ப்பதற்கு அரசுகள் போதுமான வளங்களை மூலதனம் செய்தால் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் சமயங்களில் பல மனித உயிர்களைக் காப்பாற்றவும் சேதங்களைக் குறைக்கவும் முடியும் என்று பான் கி மூன் கூறினார்.

லெபனன் நாட்டு ஸ்டார் என்ற தினத்தாளுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்ட அவர், சிலே மற்றும் ஹெய்ட்டி நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பற்றிக் குறிப்பிட்டார்.

எடுத்துக்காட்டுக்கு பங்களாதேஷ், மியான்மார் போன்ற நாடுகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்கள் குறித்துப் பேசினார்.

1970ம் ஆண்டில் பங்களாதேஷில் இடம் பெற்ற போலா கடும் புயலில் 5 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்தனர். தற்சமயம் அந்நாட்டில் 2500 புயல் புகலிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 32 ஆயிரத்துக்கு அதிகமான தன்னார்வப் பணியாளர்க்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் பேரிடர் சமயங்களில் இழப்புகள் குறைந்துள்ளன என்றும் மூன் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.