2010-03-19 15:57:54

கடந்த பத்தாண்டுகளில் சேரி மக்களில் இருபது கோடிக்கு மேற்பட்டவர்கள் அந்த நிலைகளிலிருந்து மேம்பட்டுள்ளனர்-ஐ.நா.


மார்ச்19,2010 உலகில் கடந்த பத்தாண்டுகளில் சேரிவாழ் மக்களில் இருபது கோடிக்கு மேற்பட்டவர்கள் அந்த நிலைகளிலிருந்து மேம்பட்டுள்ள அதேவேளை, அதே காலகட்டத்தில் சேரிவாழ் மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஆறு கோடி அதிகரித்திருப்பதாக ஐ.நா.வின் புதிய அறிக்கை கூறுகிறது.

“2010-2011 உலக நகரங்களின் நிலை” குறித்த ஐ.நா.வின் மனித வளர்ச்சித்திட்ட அமைப்பின் ஆய்வறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அதன் இயக்குனர் Anna Tibaijuka.

சேரிகளின் தரம் உயர்த்தப்பட்டதால் இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து சுமார் 22 கோடியே 70 இலட்சம் சேரி மக்கள், சேரி நிலையிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் Anna கூறினார்.

எனினும், இரண்டாயிரமாம் ஆண்டில் 77 கோடியே 70 இலட்சமாக இருந்த சேரிமக்களின் எண்ணிக்கை, 2010ம் ஆண்டில் ஏறத்தாழ 83 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் ஐ.நா அறிக்கை கூறுகிறது.

உலகில் வாழும் சேரிமக்களில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பகுதியினர் ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் வாழ்கின்றனர் என்றும் கூறும் அவ்வறிக்கை, உலகின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது ஏறத்தாழ 350 கோடிப் பேர் தற்சமயம் கிராமங்களில் வாழ்கின்றனர் என்றும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.