2010-03-17 15:43:13

வெளிநாட்டு பல்கலை கழகங்கள் குறித்த சட்ட சீர்திருத்தம் பல ஆண்டுகளுக்கு முன்னமேயே செய்திருக்க வேண்டியதொன்று - அருட்தந்தை பாபு ஜோசப் 


மார்ச்17,2010 வெளிநாட்டு பல்கலை கழகங்கள் தங்கள் கல்வி நிறுவனங்களை இந்தியாவில் அமைப்பதற்கு ஏதுவாக சட்ட சீர்திருத்தத்தை இந்திய அமைச்சரவை மேற்கொண்டுள்ளது பல ஆண்டுகளுக்கு முன்னமேயே செய்திருக்க வேண்டியதொன்று என்று இந்திய கத்தோலிக்க திருச்சபையின் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.
 நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே விவாதத்திற்கு வந்த இந்த  மசோதா இடதுசாரி கட்சிகளால் எதிர்க்கப்பட்டதென்றும், இது பல சீர்த்திருத்தங்களுடன் மீண்டும் விவாதிக்கப்படுவது பல்லாயிரம் மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று அருட்தந்தை பாபு ஜோசப் கூறினார்.
வெளிநாடுகளின் பல பல்கலை கழகங்களில் தத்துவ இயல், இறையியல் பாடங்கள் நடத்தப்படுவதால், அத்துறைகள் இந்தியாவில் நிறுவப்படும் வேளை அதன் மூலம் இந்திய குரு மாணவர்களும் அதிகம் பயன் பெற வாய்ப்புகள் உருவாகும் என்று அருட்தந்தை ஜோசப் மேலும் கூறினார்.அமைச்சர் கபில் சிபல் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி,  இந்திய கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு மாபெரும் முயற்சி என்று  இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.