2010-03-17 15:56:15

நலவாழ்வு சீர்திருத்த மசோதா அமெரிக்க பாராளு மன்றத்தில் வெற்றிபெறாத வண்ணம்  செபிக்கும்படி அழைப்பு - Arlington மறைமாவட்ட ஆயர் Paul Loverde


மார்ச்17,2010 நலவாழ்வு சீர்திருத்த மசோதா அமெரிக்க பாராளு மன்றத்தில் வெற்றிபெறாத வண்ணம் மக்களைச் செபிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டில் Arlington மறைமாவட்ட ஆயர் Paul Loverde.
இந்த வாரம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாராளு மன்றத்தில் விவாதிக்கப்பட விருக்கும் இந்த மசோதா 216 ஓட்டுகள் பெற்றால் அரசியல் சட்டமாகும் சூழ்நிலையில், அந்த அளவு ஓட்டுகள் பெறக்கூடாதென கத்தோலிக்கர்கள் வேண்டிக்கொள்ள வேண்டுமெனவும், அந்தக் கருத்துக்காக உபவாசம், மற்றும் சில ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஆயர் Loverde அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாரம் விவாதத்திற்கு வந்துள்ள இந்த மசோதா கருகலைத்தலுக்கு மக்களின் வரிபணத்தை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்குவதை அமெரிக்க ஆயர்கள் துவக்கத்திலிருந்தே எதிர்த்து வந்துள்ளனர் என்றும் கத்தோலிக்கர்களின் மனசாட்சிக்கெதிரான இவ்வகை சட்ட சீர்திருத்தத்தை கத்தோலிக்கர் எப்போதும் எதிர்ப்பார்கள் என்றும் ஆயர் மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.