2010-03-17 15:42:42

தவக்காலச் சிந்தனை – மார்ச் 18.


(வழங்குபவர் இயேசு சபை அருட்தந்தை பவுல் ராஜ்).
RealAudioMP3
மோசே, மலையில் யாவே கடவுளிடம் இருந்து 10 கட்டளைகளைப் பெறும் நேரம்
இஸ்ரயேல் மக்கள் ஆரோனைக் கட்டாயப்படுத்தி பொன் கன்றுக்குட்டியொன்றைச் செய்து அதனை வழிபடுகின்றனர். உயிர் தந்து வழி நடத்தி வரும் யாவே கடவுள் சினம் கொண்டு, வணங்கா கழுத்துடைய அம்மக்களை அழித்தொழிக்க நினைக்கும் போது மோசே அவர்களுக்காகப் பரிந்து பேசவே, கடவுள் அம்மக்களை மன்னிக்கும் பகுதியை இன்றைய விடுதலைப் பயண நூலில் இருந்து வாசித்தோம். முதன்மையாக இருக்கவேண்டிய கடவுள் புறந்தள்ளப்பட்டு அவருடைய இடத்தில் பொன் கன்றுக்குட்டியை வைத்து வழிபட்ட இஸ்ரயேல் மக்களிடம் இருந்து நாம் எவ்விதத்திலும் வித்தியாசப்படுபவர்கள் அல்லர்.
நாமும் கடவுளை விட்டு விலகுவதோடு அவருக்குப் பதிலாக செல்வத்திற்கு, பணத்திற்கு, பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையா?
கடவுளுக்குப் பதிலாக நமது பெயர், புகழ், பெருமை, ஈகோவிற்கு வழிபாடு நடத்தி தம்பட்டம் அடித்ததில்லையா?
கடவுளை மறந்து ஆணவம், கர்வம், தலைக்கனம் கொண்டு அலைந்ததில்லையா?
பேராசைக் கொண்டவர்களாக சுயநலத்தோடு கடவுள் இருக்கவேண்டிய இடத்தில் நம்மை, பிறரை, பொருட்களை முதன்மைப்படுத்தவில்லையா?
மோசேயைப் போன்று இன்றைய தினம் இயேசு கிறிஸ்து நமக்காக, பாவம் செய்து விலகி வாழும் நமக்காக, இறைவனை மறந்து தன்னலம் கொண்டு வாழும் நமக்காக பரிந்து பேசுகிறார்.
கல்மனம் கரைய கண்களும் பனிக்க
கைகளைக் குவித்து கடவுளின் பாதத்தில் அமர்வோம்.
அவரே நமது முதலும் முடிவுமாக மாற்றிடத் துணிவோம்.







All the contents on this site are copyrighted ©.