2010-03-17 15:44:15

அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், கனடாவிலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது


மார்ச்17,2010 அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், கனடாவிலும் கத்தோலிக்க திருச்சபை, மற்ற கிறிஸ்தவ சபைகள் ஆகியவற்றில் உள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதென 2010ஆம் ஆண்டிற்கான கிறிஸ்தவ சபைக்களுக்கான அறிக்கை ஒன்று கூறுகிறது.
6 கோடியே 80 லட்சம் கத்தொலிக்கர்களைக் கொண்ட இந்நாடுகளில் 2009ஆம் ஆண்டு வெளியான தகவலின்படி கத்தோலிக்கரின் எண்ணிக்கை சற்றே குறைந்திருந்ததென்றும் இவ்வாண்டு வெளியாகியுள்ள "Yearbook of American & Canadian Churches" அறிக்கையில் அந்த எண்ணிக்கை 1.49 விழுக்காடு அதிகரித்துள்ளதென்றும் கூறப்பட்டுள்ளது.மதம் சாராக் கொள்கைகள் அதிகம் பரவி வரும் வட அமெரிக்க நாடுகளில் மதம் இன்னும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு அம்சமாக உள்ளதென செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.