2010-03-17 15:55:47

Romano Canavese நகரின் கௌரவக் குடிமகன் என்ற பட்டம் தனக்கு அளிக்கப்பட்டதற்கு நன்றி கூறினார் திருத்தந்தை


மார்ச்17,2010 Romano Canavese நகரின் கௌரவக் குடிமகன் என்ற பட்டம் பெறுவதில் தான் அதிகம் மகிழ்வதாகத் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் கூறினார்.
இப்புதனன்று வழங்கப்பட்ட இந்த பட்டம் தனக்குக் கூடுதலான மகிழ்வை அளிப்பதற்கு இரு காரணங்கள் உண்டு என்று கூறிய திருத்தந்தை, அதை விளக்கும் வகையில், முதலாவது, தான் அதிகம் மதிக்கும் திருப்பீடத்தின் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே இந்நகரைச் சார்ந்தவர் என்பதும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்நகருக்குத் தான் பயணம் மேற்கொண்டபோது, அம்மக்களின் அயரா உழைப்பைத் தான் நேரில் கண்டது நல்லதொரு அனுபவம் என்பதும் தன் மகிழ்வுக்கான காரணங்கள் என்று கூறினார்.Romano Canavese விசுவாசத்தில் ஊறிய நகர் என்று கூறிய திருத்தந்தை, பல மறைசாட்சிகளை உலகிற்களித்த இந்நகரினர், நற்செய்தி படிப்பினைகள் படி பாரம்பரிய மதிப்பீடுகளைப் போற்றி வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.







All the contents on this site are copyrighted ©.