2010-03-16 14:53:42

மக்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதால் விவசாயம் வெகு அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கோ ஆயர் கவலை.


மார்ச் 16, 2010. காங்கோ ஜனநாயகக் குடியரசின் தென் மற்றும் வட கிவு மாகாணங்களில் அப்பாவி மக்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதால் விவசாயம் வெகு அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலையை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் ஃபிரிதோலின் அம்பொங்கோ பெசுங்கு.

மத்திய ஆப்ரிக்க குடியரசு, சூடான், உகாண்டா ஆகியவைகளுடன் ஆன காங்கோ எல்லையில் LRA புரட்சியாளர்களின் வன்முறைகளுக்குப் பயந்து மக்கள் வேறு இடங்களுக்குக் குடிபெயர்வதால் விவசாயமும் அதன் வழி உணவுப் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக கூறினார் காங்கோ ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் ஆயர் பெசுங்கு.

வன்முறை நடவடிக்கைகளால் பசிச்சாவுகளும் நோய்களும் தொடரும் அபாயம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார் ஆயர்.








All the contents on this site are copyrighted ©.