2010-03-16 14:55:17

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் உள்ள தலித் மக்களுக்கும் தனிப்பட்டச் சலுகைகள் வழங்கப்பட இவ்விரு மதங்களின் தலைவர்கள் போராட்டம்.


மார்ச் 16, 2010. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்திலுள்ள, சமூக மற்றும் பொருளாதார வகையில் பின்தங்கிய ஏழைகளுக்கு தனிப்பட்டச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் அடையாளப் போராட்டத்தை டெல்லியில் தொடங்கினர் இவ்விரு மதங்களின் தலைவர்கள்.

செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன் மற்றும் சில இஸ்லாமியத் தலைவர்களுடன் 19 மாநிலங்களைச்சேர்ந்த ஏறத்தாழ 500பேர் கலந்து கொண்ட இப்பேரணியில், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் உள்ள தலித் மக்களுக்கும் இட ஒதுக்கீடுகளும் தனிச்சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என விண்ணப்பிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்து மதத்தில் வழங்கப்படும் சலுகைகள் ஏனைய மதத்தின் அதே இன மக்களுக்கும் வழங்கப்படவேண்டும் என விண்ணப்பித்த இப்பேரணி, 2007ம் ஆண்டில் இந்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.