2010-03-15 14:50:45

வெளிநாட்டு பல்கலை கழகங்கள் தங்கள் கல்வி நிறுவனங்களை  இந்தியாவில் திறப்பதற்கு அனுமதி.- இந்திய அமைச்சரவை


மார்ச்15,2010. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் கல்வி நிறுவனங்களை இந்தியாவில் திறப்பதற்கு அனுமதிக்கும் பரிந்துரையை அங்கீகரித்துள்ளது இந்திய அமைச்சரவை.
தரம் வாய்ந்த கல்விக்கென இந்திய மாணவர்கள் அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பெருமளவில் செல்வது இதன் வழி குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வித் துறையில் சீர்திருத்தத்தைக் கொணரும் இப்பரிந்துரை தற்போது பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கென முன் வைக்கப்படும் என்றார் அமைச்சர் கமல் நாத்.







All the contents on this site are copyrighted ©.