2010-03-13 14:46:01

மியான்மாரின் தேர்தல்கள் வெட்கத்துக்குரியவை - தென்னாப்ரிக்க ஆங்லிக்கன் பேராயர்


மார்ச்12,2010 மியான்மாரின் தற்போதைய நிலைமையின்கீழ் சுதந்திரமான ஜனநாயகத் தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்ப்பதைவிட நரகத்தில் பனியைக் கண்டுபிடித்துவிடலாம் என்று தென்னாப்ரிக்க ஆங்லிக்கன் சபை பேராயர் டெஸ்மன்ட் டுட்டு (Desmond Tutu) கூறினார்.

Irrawaddy என்ற மியான்மாரின் ஜனநாயக ஆதரவு செய்தித்தாளுக்குப் பேட்டியளித்த பேராயர் டுட்டு, இந்தத் தேர்தல்கள் கேலிக்கூத்தானவை என்று குறை கூறினார்.

தென்னாப்ரிக்காவில் நடைமுறையில் இருந்த நிறவெறிக் கோட்பாட்டுக்கு எதிராக நடத்திய போராட்டங்களுக்காக நொபெல் அமைதி விருது பெற்றுள்ள ஆங்லிக்கன் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு, ஒருநாள் யாங்கூன் சென்று எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சு கியைச் (Aung San Suu Kyi) சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

தென்னாப்ரிக்காவின் நெல்சன் மண்டேலா போன்று சு கி யும் ஒருநாள் விடுதலை அடைந்து மியான்மாரை ஆட்சி செய்வார் என்ற தனது நம்பிக்கையையும் பேராயர் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.