2010-03-13 14:34:09

குரோவேஷியக் குடியரசு பிரதமர், திருத்தந்தை சந்திப்பு


மார்ச்13,2010 குரோவேஷியக் குடியரசின் பிரதமர் Jadranka Kosorஐ இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே (Tarcisio Bertone S.D.B,) நாடுகளுக்கிடையேயைன உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி (Dominique Mamberti) ஆகியோரையும் சந்தித்தார் குரோவேஷியப் பிரதமர்.

இச்சந்திப்புக்களில் தற்போதைய பல சர்வதேச விவகாரங்கள் பேசப்பட்டாலும், குறிப்பாக போஸ்னியா மற்றும் ஹெர்செகொவினாவிலுள்ள குரோவேஷிய சமூகத்தின் நிலைமை குறித்துப் பேசப்பட்டதாகத் திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது. இந்நாடுகளில் மூன்றில் ஒருவர் குரோவேஷியர்கள்.

திருச்சபையும் அரசும் சேர்ந்து செய்யக்கூடிய விவகாரங்களில் உறுதியான உரையாடல் அவசியம் என்று கூறப்பட்டதோடு, ஐரோப்பிய சமுதாய அவையில் குரோவேஷியா முழுமையாக சேர்வது குறித்த சில கருத்துக்களும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டன என்றும் அவ்வலுவலகம் அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.