பிரிட்டனில் புகலிடம் தேடுவோர் நன்முறையில் நடத்தப்பட கிளாஸ்கோ பேராயர் அழைப்பு
மார்ச்12,2010 பிரிட்டனின் Glasgow வில் இரஷ்ய குடும்பம் ஒன்று, கொடூரமான விதத்தில் தற்கொலை
செய்து கொண்டுள்ளவேளை, பிரிட்டனில் புகலிடம் தேடுவோர் நன்முறையில் நடத்தப்படுமாறு அழைப்பு
விடுத்துள்ளார் கிளாஸ்கோ பேராயர் கோன்ட்டி.
புகலிடம் தேடுவோர் நல்ல முறையில்
நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இச்சனிக்கிழமை, கிளாஸ்கோவில் இடம் பெறவுள்ள பேரணிக்கு
ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள பேராயர் கோன்ட்டி, பலஆண்டுகள் இந்நகரில் வாழும்
அகதிகள் திடீரென வெளியேற்றப்படுவது கண்டு தான் அதிர்ச்சி அடைவதாகக் கூறியுள்ளார்.
அகதிகளுடன்
பல ஆண்டுகளாகப் பழகியவர்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்க முன்வரும் வேளை, அவர்கள் வெளியேற்றப்படுவது
வருத்தத்துக்குரியது என்றும் பேராயர் கூறினார்.
கடந்த ஞாயிறன்று ஓர் இரஷ்ய குடும்பம்
மேல் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது.
இது குறித்துப்
பேசிய பேராயர், நாம் மனிதர்களை மாண்புடன் நடத்துகின்றோமா என்பதை மனசாட்சியிடம் கேட்க
வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.