2010-03-12 16:05:21

தூரின் நகருக்குத் திருத்தந்தை திருப்பயணம்


மார்ச்12,2010 இயேசுவின் இறந்த உடலைப் போர்த்திய புனிதப் போர்வை இத்தாலியின் தூரின் நகரில் பொது மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படுவதை முன்னிட்டு அந்நகருக்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தை, வருகிற மே மாதம் 2ம் தேதி ஞாயிறன்று தூரின் நகர் சென்று அந்நகரின் புனித கார்லோ வளாகத்தில் திருப்பலி நிகழ்த்துவார், அந்தத் புனிதப் போர்வையை பார்வையிடுவார் மற்றும் மாலையில் இளையோரைச் சந்திப்பார் என்று தூரின் பேராயர் அறிவித்துள்ளார்.

இந்தப் புனிதப் போர்வையானது, வருகிற ஏப்ரல் 10ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை பொது மக்கள் பார்வைக்கெனத் திறந்து வைக்கப்படுகிறது.

பத்தாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திறந்து வைக்கப்படும் இந்தப் புனிதப் போர்வையை சுமார் 20 இலட்சம் திருப்பயணிகள் தரிசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், எகிப்து நாட்டு கெய்ரோவின் al-Azhar மசூதி மற்றும் al-Azhar பல்கலைகழகத்தின் பெரிய குருவான Muhammad Sayyid Tantawy திடீரென இறந்ததையொட்டித் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தை, வருகிற ஞாயிறு மாலை உரோம் இவாஞ்சலிக்கல் லூத்தரன் ஆலயம் சென்று அச்சபையினரையும் சந்திப்பார்.








All the contents on this site are copyrighted ©.