2010-03-12 16:09:58

ஆப்ரிக்காவில் மூன்று பேருக்கு ஒருவர் வீதம் கடும் பசியை எதிர்நோக்குகின்றனர்- ஐ.நா.


மார்ச்12,2010 ஆப்ரிக்காவில் உணவு உதவிக்கென ஆண்டுக்கு 300 கோடி டாலர் வீதமும், உணவு இறக்குமதிக்கென 3,300 கோடி டாலரும் செலவு செய்யப்பட்டாலும், அக்கண்டத்தில் மூன்று பேருக்கு ஒருவர் வீதம் கடும் பசியை எதிர்நோக்குகின்றனர் என்று ஐ.நா.கூறியது.

ECA என்ற ஆப்ரிக்காவுக்கான ஐ.நா.வின் பொருளாதார கமிஷனின் உணவு பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி அமைப்பின் இயக்குனர் Josue Dione உரையாற்றுகையில், இந்தப் பணத்தை உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்குப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்தார்.

ஆப்ரிக்காவின் சாகுபடி நிலங்களில் 4 விழுக்காட்டுக்கும் குறைவாகவே விவசாயம் செய்யப்படுகின்றது, ஆனால் ஆசியா மற்றும் பசிபிக்கில் 33 விழுக்காட்டு நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.